உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீ விபத்தில் ஒருவர் பலி

தீ விபத்தில் ஒருவர் பலி

கோவை; கோவைபுதுார் அண்ணா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 26. இவரது உறவினர் சுப்ரமணி, 62. மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டில் தங்குவதில்லை. சில தினங்களுக்கு முன், பொன்னையராஜபுரம் பகுதியில் நின்றிருந்த இவர், புகைபிடிப்பதற்காக பீடியை பற்ற வைத்தார். எதிர்பாராத விதமாக தீ அவர் மீது பரவியதில், படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ