மேலும் செய்திகள்
தீக்காயமடைந்த தம்பதி 'அட்மிட்'
24-Sep-2025
வடவள்ளி; கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பொம்மணம்பாளையம், சின்னமலையை ஒட்டியுள்ள ராஜேந்திரன் தோட்டத்தில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த செந்தில் என்ற மருதாச்சலம், 55, பத்து ஆண்டுகளாக, குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் கடைக்குச் சென்று விட்டு, அவர் வீடு திரும்பினார். மனைவியை வீட்டில் விட்டு விட்டு, தோட்டத்துக்குள் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக, அங்கு வந்த காட்டு யானை, செந்திலை தாக்கியது. அவரது வயிற்றுப்பகுதியில் யானை மிதித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள், செந்திலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
24-Sep-2025