உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வன எல்லையோர பகுதிகளில் ஒரு டன் குப்பை அகற்றம்

வன எல்லையோர பகுதிகளில் ஒரு டன் குப்பை அகற்றம்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையில், வனப்பணியாளர்கள், ரோட்டரி கிளப் தனியார் கல்லூரி மாணவர்கள், கராத்தே ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டனர். அவர்கள் சாலை ஓரமாக கிடந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் மாணவர்களுக்கும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும் பிளாஸ்டிக்கால் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை