வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நான் சர்க்கரை மட்டும் வாங்குகிறேன் ஆனால் அனைத்து பொருட்களும் வாங்கியுள்ள தாங் குறுஞ்செய்தி வருகிறது
கோவை : 'இனி ரேஷன் கடைகளுக்கு, ஒரிஜினல் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்' என்று, மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.போலி ரேஷன் கார்டுகள் புழக்கம் குறித்து, கலெக்டருக்கு புகார் வந்தது. இது குறித்து, நமது நாளிதழில் நேற்று, 'கலப்படம்' என்ற தலைப்பில், விரிவான செய்தி வெளியானது.இதையடுத்து, 'உண்மையான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே, பொருள் வழங்கப்படும்' என்று, மாவட்ட வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அசல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கொண்டு வரும், கார்டுதாரர்களுக்கு மட்டுமே பி.ஓ.எஸ்.,இயந்திரங்கள் வாயிலாக, ஸ்கேன் செய்து கைரேகை பதிவு பெற்ற பின், ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். 'இதை, ரேஷன்கடை பணியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
நான் சர்க்கரை மட்டும் வாங்குகிறேன் ஆனால் அனைத்து பொருட்களும் வாங்கியுள்ள தாங் குறுஞ்செய்தி வருகிறது