உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கோவையில் திறப்பு விழா

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கோவையில் திறப்பு விழா

கோவை:கோவை ஒப்பணக்கார வீதியில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு விழா, விமரிசையாக நடந்தது.சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், தமிழகம் முழுவதும் தனது விற்பனை இலக்கை நிர்ணயித்து, முதல் கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் தடம் பதித்து வருகிறது. ஆறாவது சூப்பர் ஸ்டோர்ஸாக, கோவை ஒப்பணக்கார வீதியில், நேற்று திறப்பு விழா நடந்தது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் ராஜரத்தினம் திறந்து வைத்தார். ரேவதி ராஜரத்தினம் குத்துவிளக்கேற்றினார்.தரைதளத்தில் ஜூவல்லரி, பெண்களுக்கான ஆடைகள், கவின்மிகு கலைக்களஞ்சியமாக அழகூட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் பட்டாடைகளும், அழகு சாதனப் பொருட்களும், இரண்டாவது தளத்தில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆயத்த ஆடைகளும் வைக்கப்பட்டுள்ளன.மூன்றாவது தளத்தில், ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள், நான்காவது தளத்தில் காலணிகள், டிராவல் பேக், ஸ்டேஷனரி, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.திறப்பு விழா பரிசாக, நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, பவுனுக்கு ரூ.2,000 தள்ளுபடி, வைரத்துக்கு ஒரு காரட்டுக்கு ரூ.25 ஆயிரம் தள்ளுபடி, வரும் 25ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டார்.திறப்பு விழாவில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் சபாபதி, சுனிதா சபாபதி, இயக்குனர்கள் ரோஷன் ஸ்ரீ ரத்னம்,யோகேஷ் ஸ்ரீ ரத்னம், வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை