உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறப்பு

மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறப்பு

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து பிள்ளையார்புரம் செல்லும் சாலையில் ஓடை ஒன்று செல்கிறது. இங்குள்ள பாலம் குறைந்த உயரத்தில். அமைந்திருந்தது. மழை காலத்தில் சாலையில் மழைநீர் வழிந்தோடும். மக்கள் சாலையை பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். இவ்விடத்தில் புதிய பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்தாண்டு, 58.7 லட்சம் ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணி துவங்கியது. பணி முடிந்து நேற்று முறைப்படி பாலத்தை மேயர் கல்பனா திறந்து வைத்தார். துணை மேயர் வெற்றி செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாநகராட்சி ஆளும்கட்சி தலைவர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி இன்ஜி., சபரிராஜ், முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை