உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோதண்டராமர் கோயிலில்30ல் பரமபத வாசல் திறப்பு

 கோதண்டராமர் கோயிலில்30ல் பரமபத வாசல் திறப்பு

கோவை: கோதண்டராமர் கோயிலில்வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச., 30 அன்று காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. 5:30 மணிக்கு சுவாமி சேஷ வாகனத்தில் சீதா, லட்சுமன, ஹனுமத் சமேத ஸ்ரீகோதண்டராமராக எழுந்தருளுகிறார். காலை 6:30 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவீதி உலா நிறைவு செய்து, மீண்டும் 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பிரவசன மண்டபத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளுகிறார், பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அர்ச்சனை தொடர்ந்து நடைபெறும். மதியம் 1:30 மணி முதல் 3:30 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று கோவில் அறங்காவலர்குழு தலைவர் நாகசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை