ரூ.3.68 கோடியில் புதுப்பித்த ஆம்னி பஸ் ஸ்டாண்ட் திறப்பு
கோவை; கோவை மாநகராட்சி மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சிகளில், ரூ.30.72 கோடிக்கு முடிக்கப்பட்ட, 15 பணிகளை அமைச்சர் நேரு நேற்று துவக்கி வைத்தார். பின், 271 கோடி மதிப்பிலான, 1,028 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நட்டார்.கோவை - சத்தி ரோட்டில் ரூ.3.68 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை அமைச்சர்கள் நேரு, செந்தில்பாலாஜி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.பட்டேல் சாலையில் கட்டப்பட்ட வணிக வளாகம், மருதாபுரத்தில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை ஆகியவற்றை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதேபோல், கோவை மாவட்டத்தின் இதர பகுதிகள், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ரூ.30.72 கோடிக்கு முடிந்த, 15 திட்ட பணிகளை துவக்கி வைத்தார். மேலும், ரூ.271 கோடி மதிப்பிலான, 1,028 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.