ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி: பி.ஜி.வி., பள்ளியில் கொண்டாட்டம்
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றியை மாணவர்கள் கொண்டாடினர்.இந்நிகழ்வையொட்டி, 'வித் சிந்தூர் வி வின்' என்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவில் மாணவர்கள் நின்று, பள்ளியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன், முப்படை வீரர்களின் வீரச்செயலையும், பயங்கரவாத எதிர்ப்பு செயல்பாட்டையும், நம் ராணுவத்தினரின் வீர செயல்கள், நாட்டு மக்களின் தேசப்பற்று மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்பயிற்சி ஆசிரியர்கள் கண்ணன், ரஞ்சனி ஆகியோர் செய்து இருந்தனர்.