மேலும் செய்திகள்
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் தொகை தர உத்தரவு
27-Sep-2024
கோவை : விபத்தில் சிக்கிய சரக்கு வாகனத்துக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.நீலாம்பூர், தொட்டிப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயனுக்கு சொந்தமான சரக்கு வேனிற்கு, ஆண்டுதோறும், இன்சூரன்ஸ் பிரீமியம் 20,199 ரூபாய் செலுத்தி வந்தார். இந்நிலையில் அவரது சரக்கு வாகனம் விபத்தில் சிக்கி சேதம் அடைந்தது.இதனால் வாகனகாப்பீடு இழப்பீடு வழங்ககோரி,இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். டிரைவர் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதாக கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்ததால், மனுதாரருக்கு 2.46 லட்சம் ரூபாய் இழப்பீடு, மன உளைச்சல் மற்றும் செலவு தொகை, 15,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.
27-Sep-2024