மேலும் செய்திகள்
லேப்டாப் அடிக்கடி பழுது; இழப்பீடு வழங்க உத்தரவு
24-Apr-2025
கோவை : கோவை, ஈச்சனாரி பகுதியை சேர்ந்த தீபக் என்பவர் மனைவி சிந்துஜாவுக்கு, சித்தாபுதுாரிலுள்ள தனியார் மருத்துவமனையில், 2019, பிப்., 24ல் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது, மூச்சு திணறல் ஏற்பட்டு, வாந்தி எடுத்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, டிஸ்சார்ஜ் செய்தனர்.அதன் பிறகும் குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்பட்டதால், மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக 1.57 லட்சம் ரூபாய் செலவானது. ஆனாலும் வாந்தி எடுப்பது நிற்கவில்லை.மற்றொரு மருத்துவமனையில் குழந்தைகள் சேர்க்கப்பட்டு, குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு குழந்தைகள் வாந்தி எடுக்காமல், பூரண குணமடைந்தனர். இழப்பீடு வழங்கக்கோரி, முதலில் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ' தனியார் மருத்துவமனை மருத்துவ சிகிச்சை அளித்ததில், சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் செலுத்திய மருத்துவ செலவு தொகை, 1.57 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும்,மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
24-Apr-2025