உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூராட்சிகளை வகைப்படுத்தி அரசாணை  1,891 புதிய பணியிடங்கள் உருவாக்கம் 

பேரூராட்சிகளை வகைப்படுத்தி அரசாணை  1,891 புதிய பணியிடங்கள் உருவாக்கம் 

பொள்ளாச்சி: தமிழக பேரூராட்சிகள், ஆண்டு வருவாய் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு, 1,891 புதிய பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 490 பேரூராட்சிகள் உள்ளன. ஆண்டு வருவாய் அடிப்படையில், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள பேரூராட்சிகள் சிறப்பு நிலை; ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வருவாய் கொண்டவை, தேர்வு நிலை பேரூராட்சியாக வகை படுத்தப்பட்டு உள்ளன.இதேபோல, மொத்தம், 50 லட்சம் ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் கொண்டவை முதல் நிலை; 50 லட்சம் ரூபாய் வருவாய் கொண்டவை இரண்டாம் நிலை பேரூராட்சிகள், என, வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது, 62 சிறப்பு நிலை, 179 தேர்வு நிலை, 190 முதல் நிலை, 59 இரண்டாம் நிலை என, பேரூராட்சிகளை வகைப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.மேலும், தலைமை கிளர்க், ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரெக்கார்டு கிளர்க், ஆபீஸ் அசிஸ்டன்ட், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், உதவி சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், அசிஸ்டன்ட் இன்ஜினியர், ஜூனியர் இன்ஜினியர், ஓவர்சீஸ், ஒர்க் இன்ஸ்பெக்டர் என, 1,891 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி