உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்கக வேளாண் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

அங்கக வேளாண் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

மேட்டுப்பாளையம்: -: கோவை மாவட்டம் காரமடையில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 1ம் தேதி வரை விவசாயிகளுக்கு அங்கக (இயற்கை) வேளாண்மை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்க உள்ளது. இப்பயிற்சியில் இடுபொருள் உற்பத்தி முறைகளான பஞ்சகாவியா, தசகாவியா, மீன் அமிலம், ஐந்திலை கரைசல், மண்புழு உர உற்பத்தி உள்ளிட்டவைகள் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளின் அனுபவ பகிர்வும் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் கோமதியை அணுகலாம். தொலைபேசி எண்களான 7812803805, மற்றும் 9047756077 எண் களுக்கு தொடர்பு கொள்ளலாம்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை