ஓரியன் டிராபி கூடைப்பந்து போட்டி; ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி முதலிடம்
கோவை; 'ஓரியன் டிராபி' கூடைப்பந்து போட்டி மினி பாய்ஸ் பிரிவில் ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., 'ஏ' அணியும், மினி கேர்ல்ஸ் பிரிவில் அல்வெர்னியா பள்ளியும் கோப்பையை தட்டியது.நேரு ஸ்டேடியம் அருகே மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில், 15வது 'ஓரியன் டிராபி' கூடைப்பந்து போட்டி கடந்த, 16ம் தேதி துவங்கியது; வரும், 23ல் நிறைவடைகிறது. ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடந்துவரும் இப்போட்டியில், மினி பாய்ஸ் பிரிவில், 16 அணிகள், மினி கேர்ல்ஸ் பிரிவில், 8 அணிகள் பங்கேற்றன.மென்ஸ் பரிவில், 27 அணிகள் விளையாடி வருகின்றன.பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த 'மினி பாய்ஸ்' இறுதிப்போட்டியில் ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., 'ஏ' அணி, 85-56 என்ற புள்ளிகளில் விஸ்வதீப்தி அணியை வென்று முதல் பரிசை தட்டியது. 'மினி கேர்ல்ஸ்' பிரிவில், அல்வெர்னியா பள்ளி அணி, 75-28 என்ற புள்ளிகளில் பாரதி அணியை வென்று முதல் பரிசை தட்டியது.'மென்ஸ்' பிரிவில், 10 எக்ஸ் பி.பி.ஏ., அணி, 79-53 என்ற புள்ளி கணக்கில் பீளமேடு பி.பி.சி., அணியையும், ராம்ஸ் பி.பி.ஏ., அணி, 86-85 என்ற புள்ளிகளில் பொள்ளாச்சி பி.பி.சி., அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.