வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அடடா நல்ல தண்டனை. இவர் திருந்தும் அளவிலா தண்டனை உள்ளது? இனி கட்டுப்பாட்டு அறையில் என்ன கூத்து நடக்க போகிறதோ
மேலும் செய்திகள்
சிட்டி க்ரைம்
17-Oct-2024
கோவை:கோவை, சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பாலமுருகன், 40. இவர், நேற்று முன்தினம் இரவு, சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார்.அங்கு தனியார் மருத்துவமனை செவிலியர்கள் சிலர், டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, போக்குவரத்து காவலர் தன் அலைபேசியில், அவர்களை படம் பிடித்துள்ளார். இதைப்பார்த்த பெண்களில் ஒருவர், அவரிடம் கேட்டுள்ளார்.அப்பெண்ணை, காவலர் தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். பெண்கள் சத்தம் போட, அருகில் இருந்தவர்கள் அவரை துரத்தி பிடித்தனர். அவரிடம் அலைபேசியை காண்பிக்க கேட்ட போது மறுத்துள்ளார். உடன் சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சாய்பாபா காலனி போலீசார் அவரிடம் விசாரித்தனர். அவரின் அலைபேசியை சோதனை செய்தபோது, அவர் பெண்களை படம் எடுத்திருப்பது தெரியவந்தது.இது குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்திய கமிஷனர், போக்குவரத்து தலைமை காவலரை, கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
அடடா நல்ல தண்டனை. இவர் திருந்தும் அளவிலா தண்டனை உள்ளது? இனி கட்டுப்பாட்டு அறையில் என்ன கூத்து நடக்க போகிறதோ
17-Oct-2024