மேலும் செய்திகள்
மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம்
07-Jun-2025
கோவை: மாவட்ட கால்பந்து அணிக்கான தேர்வில், மாணவர்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான ஜூனியர் கால்பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில், ஜூன் மாத இறுதியில் நடக்க உள்ளது.இதை முன்னிட்டு மாவட்ட ஜூனியர் கால்பந்து அணித் தேர்வு, கோவை ரத்தினம் கல்லுாரியில் நேற்று காலை முதல் நடந்தது. தேர்வில் பங்கேற்க, கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகள், விளையாட்டு சங்கங்களை சேர்ந்த, 296 பேர் பங்கேற்றனர்.முதற்கட்டமாக நடந்த எட்டு சுற்றுகளின் முடிவில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து மாலையில் நடந்த தேர்விலிருந்து, 40 பேர் தேர்வாகினர்.இவர்களில் இருந்து, அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், இம்மாத இறுதி வரை பயிற்சி அளிக்கப்படும். மாவட்ட கால்பந்து அணிக்கான வீரர்களை, தேசிய தேர்வாளர் ராமன் விஜயன், ஜூனியர் அணியின் இந்திய வீரர் ஜெயாஇளங்கோவன், தமிழ்நாடு அணி பயிற்சியாளர் அஸ்மத்துல்லா, மாநில கால்பந்தாட்ட அணி வீரர்கள் செல்வகுமார், அஜேஸ் ஆகியோர் தேர்வு செய்தனர்.
07-Jun-2025