உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேலம் கோட்ட ரயில்வே நடத்திய ஓவியப்போட்டி

சேலம் கோட்ட ரயில்வே நடத்திய ஓவியப்போட்டி

கோவை;சேலம் கோட்ட ரயில்வே சார்பில், கோவையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, '2047ம் ஆண்டில் வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த ரயில்வே' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.சாயிபாபா காலனியில் உள்ள ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த போட்டிகளில், கோவையில் உள்ள பல பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு, விரைவில் விழா நடத்தி, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் பரிசு வழங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ