உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறவைகளின் சுதந்திரத்தை வலியுறுத்தி ஓவிய சாதனை

பறவைகளின் சுதந்திரத்தை வலியுறுத்தி ஓவிய சாதனை

கோவை : ''சுதந்திரமாக பறப்பதற்காக பிறந்தோம்'', என்ற தலைப்பில் பறவைகளின் சுதந்திரத்தை வலியுறுத்திகோவையில் ஆசிய சாதனை புத்தக நிகழ்வு நேற்று நடந்தது.கோவை சத்தி ரோட்டில் அமைந்துள்ள புரோசோன் மாலில், 'பறவைகளின் சுதந்திரத்தை வலியுறுத்தி, 'சுதந்திரமாய் பறப்பதற்காக பிறந்தோம்' என்ற ஓவிய சாதனை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.'பறவைகள் பிறந்ததே, சுதந்திரமாக பறந்து வாழ்வதற்காகத்தான்... கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பதற்கு அல்ல'. அவ்வாறு சிறைப்படுத் தும் மனிதர்களை தண்டிக்க வேண்டும், வேட்டையாடுதல் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறு தானியங்களில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை பறவைகள் மீட்பு இயக்கம், தமிழ்நாடு வனத்துறை கோவை கிளை, காட்டன் சிட்டி ரோட்டரி கிளப், டேக், ஆர்க் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஆகியவை இணைந்து நடத்தின.பள்ளி மாணவர்கள் பங்கேற்று, புரோஷன் மாலில் ஒரு மணி நேரத்தில் 900 கிலோ எடையுள்ள தானியங்களில் சுதந்திர கிளி படத்தை வரைந்தனர். சோளம், கம்பு, பச்சைப்பயறு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்களில் இந்த ஓவியத்தை வரைந்தனர். ஒன்றரை மணி நேரத்தில் விரைவாக வரையப்பட்ட இந்த ஓவியம், ஆசிய கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. 400 சதுர அடியில் வரையப்பட்ட இந்த ஓவியம் சிறு தானியங்களால் ஆசிய அளவில் வரையப்பட்ட பெரிய ஓவியம் என்ற தகுதியை பெற்றுள்ளது.ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட தானியங்கள், பறவைகளின் உணவுக்காக பார்வையாளர்களுக்கு சிறு பொட்டலங்களாக வழங்கப்பட்டன. மீதமான தானியங்கள் நேரடியாக வனத்துறையில் பறவைகளுக்கு இரையாக அளிக்கப் போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை