உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழநி பாதயாத்திரைக்குழு ஆலோசனை கூட்டம்

பழநி பாதயாத்திரைக்குழு ஆலோசனை கூட்டம்

வால்பாறை, ; வால்பாறையில், பழநி பாதயாத்திரைக்குழு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பழநி பாதயாத்திரைக்குழுவின், 49ம் ஆண்டு திருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் தலைவர் மருதையப்பன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், வரும், பிப்., 14ம் தேதி காலை, 11:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு பால் அபிேஷக, அலங்கார பூஜையும், மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது.பிப்., 16ம் தேதி சுப்ரமணிய சுவாமி கோவிலிருந்து, பழநிக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. கூட்டத்தில், பழநி பாதயாத்திரைக்குழு செயலாளர் கண்ணன், பொருளாளர் அழகுராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !