/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை பெரிய திரையில் காண பேன் பார்க்
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை பெரிய திரையில் காண பேன் பார்க்
கோவை : இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில், ஐ.பி.எல்., போட்டிகளை பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு மகிழ, 'டாடா ஐ.பி.எல்., பேன் பார்க்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பி.சி.சி.ஐ., 2015ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்., போட்டிகளை, 'பேன் பார்க்' நிகழ்ச்சி வாயிலாக ரசிர்களுக்கு பெரிய திரைகளில், ஒளிபரப்பு செய்து வருகிறது.எங்கு போட்டி நடக்கவில்லையோ, அந்த இடங்களில் 'பேன் பார்க்' வாயிலாக மைதானத்தில் நேரடியாக பார்ப்பது போன்று, பெரிய திரையில் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.அதன்படி, கோவை, நவ இந்தியா அருகே இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில் இரண்டு நாட்கள் பெரிய திரையில், மூன்று கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இங்கு ரசிகர்கள் இலவசமாக போட்டியை கண்டுகளித்தனர்.