உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிக மூடல்

பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிக மூடல்

மேட்டுப்பாளையம்; கனமழை எச்சரிக்கையை அடுத்து காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்றும், நாளையும் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லுார் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.பரளிக்காடுக்கு வர விரும்பும், சுற்றுலா பயணிகள் https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் புக் செய்து கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து வருகின்றனர்.இதனிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது.இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (14ம் தேதி) மற்றும் நாளை (15ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களுக்கு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி