துணை மருத்துவ டிப்ளமா படிப்புகள்
த மிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. டிப்ளமா படிப்புகள்: டெண்டல் மெக்கானிக் - ஆண் டெண்டல் ஹைஜினிஸ்ட் - பெண் டிப்ளமா இன் மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜி டிப்ளமா இன் டயக்னாசிஸ் டெக்னாலஜி டிப்ளமா இன் ரேடியோ தெரபி டெக்னாலஜி டிப்ளமா இன் பார்மசி டிப்ளமா இன் ஆப்தோமெட்ரி டிப்ளமா இன் நியூரோசர்ஜிக்கல் டெக்னாலஜி அண்டு ரிசர்ச் டிப்ளமா இன் மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ் ஹோம் ஹெல்த்கேர் டிப்ளமா சான்றிதழ் படிப்புகள்: கார்டியோ சோனோகிரபி இ.சி.ஜி., / டெரட் மில் டெக்னிசியன் பம்ப் டெக்னிசியன் கார்டியாக் லேப் டெக்னிசியன் எமர்ஜென்சி கேர் டெக்னிசியன் ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னிசியன் டயலிசிஸ் டெக்னிசியன் அனெஸ்தீசியா டெக்னிசியன் தியேட்டர் டெக்னிசியன் இ.இ.ஜி., / இ.எம்.ஜி., கோர்ஸ் டெக்னிசியன் மல்ட்டிபர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர் சைக்கியாட்ரிக் சப்போர்ட் வொர்க்கர் மெடிக்கல் ரெக்கார்டு டெக்னிசியன் தகுதிகள்: பொதுவாக, 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். எனினும், படிப்பிற்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் வேண்டும் தமிழக பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும் தமிழகத்தில் பெறப்பட்ட பிறப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் வகுப்பு வாரி இட ஒதுக்கீடுகோரும் மாணவரது பெற்றோரில் ஒருவரின் ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் 17 வயது நிரம்பியரவராக இருத்தல் வேண்டும் விபரங்களுக்கு: https://tnmedicalselection.net/