மேலும் செய்திகள்
'ஓவர் பிரின்ட்' தபால் தலை பின்னணியில் ஆச்சரியம்
27-Oct-2024
கோவை ; கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க குரூப் 'சி' அமைப்பினர், டில்லியில் இரு நாட்கள் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.இரு ஆண்டுகளுக்கு முன், டில்லியில், விவசாயிகள் அமைப்பினர் நடத்திய போராட்டத்துக்கு நன்கொடை அளித்ததாக கூறி, தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் 'சி' ஆகியவற்றின் அங்கீகாரத்தை, கடந்தாண்டு மத்திய அரசு திரும்ப பெற்றது.தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பினர், கடந்த மாதம் சென்னையில் நடத்திய கூட்டத்தில், 'ராஞ்சி உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், நிர்வாகம் செயல்படுத்த முன்வரவில்லை. நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அலட்சியமாக இருக்கிறது' என்று குற்றம் சாட்டினர்.மேலும், இரு கட்ட போராட்டத்தை நடத்தினர். இதற்கு தீர்வு கிடைக்காத நிலையில், டில்லியில், இன்றும், நாளையும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க குரூப் 'சி' பிரிவு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
27-Oct-2024