மேலும் செய்திகள்
'பிழைக்க தெரிந்தவர்தான்!'
08-Nov-2024
பொள்ளாச்சி; கோவை அமிர்தா வேளாண் கல்லுாரி, நான்காமாண்டு மாணவர்கள், நெகமம் அடுத்த சிறுளந்தை கிராம விவசாயிகளுடன் 'பங்கேற்பு ஊரக மதிப்பீடு' குறித்து கலந்துரையாடினர். கல்லுாரி முதல்வர் சுதீஸ்மணலில் தலைமை வகிக்க, ஊராட்சித் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.அதன்படி, விவசாயிகள் பலரும், மாணவர்களிடம், தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர். குறிப்பாக, தென்னையைத் தாக்கும் கேரளா வாடல் நோய் முக்கிய பிரச்னையாக கண்டறியப்பட்டு, சிக்கல் பாகுபாய்வு வரைபடம் வாயிலாக விவசாயிகள் விளக்கினர்.மேலும், கிராமத்தில் உள்ள வளங்கள் குறித்து, வரைபடம் வாயிலாக விளக்கிக் காண்பிக்கப்பட்டது. வி.ஏ.ஓ., தேவி, பேராசிரியர்கள் சிவராஜ், சத்யப்பிரியா, பார்த்தசாரதி மற்றும் முருகஸ்ரீதேவி, விவசாயி முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
08-Nov-2024