மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
Tata Altroz 2025 நாட்டின் ஒரே Diesel Hatchback
16-Jun-2025
பொள்ளாச்சி; 'தினமலர்' செய்தியை குறிப்பிட்டு, முதல்வர் வருகைக்காக பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், 'பேட்ச் ஒர்க்' பணிகள் அவசரகதியில் நடப்பதை எம்.எல்.ஏ., ஜெயராமன் விமர்சித்துள்ளார்.பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை முறையான பராமரிப்பு இல்லாமல், குண்டும், குழியுமாக மாறி, விபத்து பகுதியாக உள்ளது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று சிறப்பு செய்தி வெளியிடப்பட்டது.இந்த செய்தியை குறிப்பிட்டு, முதல்வர் வருகைக்காக அவசரகதியில் 'பேட்ச் ஒர்க்' பணி நடப்பதாக, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்.அவரது சமூகவலைதள பதவில், இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன் ('தினமலர்' நாளிதழ் செய்தியை குறிப்பிட்டுள்ளார்). மூன்றாண்டுகளாக சாலையை பராமரிக்காமல் தற்போது முதல்வர் வருகிறார் என்றதும், அவசரகதியில் 'பேட்ச் ஒர்க்' செய்யும் வேலை நடக்கிறது. இந்த விடியா தி.மு.க., அரசை கண்டிக்கிறோம்,' என பதிவிட்டுள்ளார்.அவரது வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், பொள்ளாச்சி - உடுமலை ரோடு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த, நான்கு ஆண்டு காலமாக பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. மரணக்கிணறுகள் போன்று குழியாக உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிப்பது தொடர்கிறது.தேசிய, மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு பலமுறை புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது, முதல்வர் இவ்வழியாக செல்ல உள்ளதால் 'பேட்ச் ஒர்க்' போடப்படுகிறது. இதுதான் திராவிட மாடலா. முழு சாலை எப்போது போடப்படும்.இந்த ரோட்டில் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர் என்பது ஆளுங்கட்சியினருக்கு தெரியாதா. உடனடியாக சாலையை முழுமையாக புதுப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
24-Jun-2025
16-Jun-2025