உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை மாற்று நிலையத்துக்கு அபராதம்

குப்பை மாற்று நிலையத்துக்கு அபராதம்

கோவை:மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பை, பீளமேடு பகுதியில் உள்ள குப்பை மாற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று குப்பை மாற்று நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரமற்ற முறையில் குப்பையை நிர்வகிப்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட யு.பி.எல்., நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க, அலுவலர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். உடனடியாக நிலையத்தை சுத்தம் செய்யவும், சுகாதாரமான முறையில் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ