உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓய்வூதியம் நமது சொத்துரிமை: ஓய்வூதியர் தின விழாவில் பேச்சு

ஓய்வூதியம் நமது சொத்துரிமை: ஓய்வூதியர் தின விழாவில் பேச்சு

கோவை:கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா வடவள்ளியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பலராமன் தலைமை வகித்தார். சங்கத்தின் முன்னாள் தலைவர் கங்காதரன் பேசுகையில், ''பல போராட்டங்களுக்கு பிறகுதான், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைத்துள்ளன. ஓய்வூதியம் சொத்துரிமை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை, நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனை பாதுகாப்பது அவசியமாகும்,'' என்றார்.மாநில செயலாளர் ஞானசேகரன் பேசும் போது, ''மத்திய- மாநில அரசுகள் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அனைவரும் ஒன்று சேர்ந்து, வலிமையாக குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நம் கோரிக்கைகளை வெல்ல முடியும்,'' என்றார்.விழாவில், 80 வயது நிறைவு செய்த ஓய்வூதியர்கள், சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மாநில பொருளாளர் திருவேங்கடம், துணைத்தலைவர் வேலாயுதம், வடவள்ளி கிளை தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் சிங்காரவேலு உள்ளிட்ட, 400 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை