உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கண்டுகொள்ளாததால் ஓய்வூதியர்கள் போராட்டம்

அரசு கண்டுகொள்ளாததால் ஓய்வூதியர்கள் போராட்டம்

கோவை; சி.ஐ.டி.யு., கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வூதியர் நல அமைப்பு இணைந்து கோவை சுங்கம் அரசு பஸ் டிப்போ முன், ஆக., 18 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.ஐ.டி.யு., அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொது செயலாளர் ஆறுமுக நயினார், பேசுகையில், ''போக்குவரத்து துறையில், 2003க்கு பின் பணியில் சேர்ந்த ஒரு லட்சம் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்று பி.எப்., கிராஜுவிட்டி, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். ஓய்வூதி யர்களுக்கு முழுமையான பஞ்சப்படி உயர்வு அளிக்க வேண்டும். 25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். சம்மேளன துணை பொது செயலாளர் கனகராஜ், மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன், செயலாளர் வேளாங்கண்ணி ராஜ், பொருளாளர் மகேஷ்குமார், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சுரேந்திரன், அருண கிரிநாதன் மற்றும் ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை