உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தொண்டாமுத்தூர்: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின், பேரூர் வட்ட கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரூர் தாலுகா அலுவலகத்தில் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூர் வட்ட கிளை தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளின்படி பழைய ஓய்வூதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அனைத்து ஓய்வூதியர்களுக்கும், நிஜமான பலன் தரும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ