உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு கல்லுாரியில் பென்டாபிளஸ்

நேரு கல்லுாரியில் பென்டாபிளஸ்

கோவை; திருமலையம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்லுாரிகளுக்கிடையேயான 'பென்டாபிளஸ்' கலை விழா, பி.கே.தாஸ் கலையரங்கில் நடந்தது. நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார். 'கலாசாரம் மற்றும் பாரம்பரியம்' எனும் கருப்பொருளில் கலை நிகழ்வுகள், போட்டிகள் நடந்தன. 55 கல்லுாரிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். தமிழ் மற்றும் மலையாள கலைஞர் அருணிமா, கேபின் க்ரூ நிபுணர் ஷரோன்டிரை போன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஹேண்ட்ஸ் ஆப் ஹோப் டிரஸ்டுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்குஉதவி உபகரணங்கள், தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. நேரு குழும நிறுவனங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார், கல்வி மற்றும் நிர்வாக இயக்குனர் நாகராஜா, நேரு கலை கல்லுாரி முதல்வர் விஜயகுமார், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !