உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறு கவியருவியில் குளித்து மகிழ்ந்த மக்கள்

ஆழியாறு கவியருவியில் குளித்து மகிழ்ந்த மக்கள்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆழியாறு கவியருவியில் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர். பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு, ஆழியாறு அணை, பூங்கா, கவியருவி என சுற்றுலாத்தலங்கள் உள்ளன.இதனால், உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. சுற்றுலா பயணியர் குடும்பத்துடன், ஆழியாறு அணைப்பகுதியில் அழகை ரசித்தனர். கவியருவியில் குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் அருவியில் ஆனந்தமாக குளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ