உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தாடை வாங்க திரண்ட மக்கள்; நெரிசலில் திக்குமுக்காடினர்

புத்தாடை வாங்க திரண்ட மக்கள்; நெரிசலில் திக்குமுக்காடினர்

பொள்ளாச்சி : கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள், தீபாவளிக்கு புத்தாடை வாங்க, கார், டூ வீலரில் நகருக்கு வந்ததால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.பொள்ளாச்சியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள், பட்டாசுகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. அதேபோல, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜவுளிக்கடைகள் உட்பட அனைத்து வகை கடைகளிலும் சலுகை விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இதனால், நகரின் முக்கிய வீதிகளில், வழக்கத்துக்கு மாறாக, மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அனைத்து கடைகளிலும் நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவில், மக்கள் முண்டியடித்து கொண்டு பொருட்களை வாங்கினார்.குறிப்பாக, புத்தாடை, வீட்டு உபயோக பொருட்கள், பேன்சி ஸ்டோர்கள், பாத்திரம் என, பலதரப்பட்ட பொருட்களையும் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இதுதவிர, சாலையோர கடைகளிலும் கண்ணாடி வளையல், கம்மல், கவரிங் நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினர்.வீதிகளில், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒலிப்பெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்துக் கொண்டே உள்ளனர்.நேற்று, கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள், பொருட்களை வாங்க கார், டூ வீலரில் நகருக்கு வந்ததால் வாகன போக்குவரத்தும் அதிகரித்தது. பஸ் ஸ்டாண்ட், தேர்முட்டி ரவுண்டானா உள்ளிட்ட பல பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அரசு டவுன் பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை