உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார் அருகே மனமகிழ் மன்றம் குன்னத்துார் மக்கள் கடும் எதிர்ப்பு

பார் அருகே மனமகிழ் மன்றம் குன்னத்துார் மக்கள் கடும் எதிர்ப்பு

அன்னூர் : குன்னத்தூர் ஊராட்சி, மாணிக்கம் பாளையம், அண்ணாமலை கார்டன் பகுதி மக்கள் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:எங்கள் பகுதியில், நான்கு ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். அது போதாது என்று, இந்த கடைக்கு 150 மீ. தொலைவில், மனமகிழ் மன்றம் என்னும் பெயரில் காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை செயல்படும் மதுபான பார் அமைக்கும் பணி துவக்கி உள்ளனர்.இதனால் நாங்கள் 200 குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. வீடுகள் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்தில் பார் அமைக்கட்டும்; தடுக்கவில்லை. புதிதாக 12 மணி நேர பார் அமைத்தால், பெண்கள், முதியோர், குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்படும்.ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையால் தினமும் இரவு நேரத்தில் இங்கு அடிதடி நடந்து வருகிறது. தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் பலன் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி