ஊரகப்பகுதியில் தொழிற்சாலைகலெக்டரிடம் அனுமதி அவசியம்
கோவை: கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக உள்ளாட்சிப்பகுதிகளில் தொழில் துவங்க தொழிற்சாலை உரிமம் பெறும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பவன்குமார் அறிக்கை: தமிழ்நாடு பஞ்சாயத்து தொழிற்சாலைகள் மற்றும் இயந்திரங்கள் நிறுவுவதற்கான அனுமதி வழங்கும் நடைமுறை விதிகள் எண்,170 ன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உத்தரவுப்படி ஊராட்சிகளின் ஆய்வாளர் கலெக்டருக்கு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.அதனால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் தொழில் துவங்குவதற்கு தொழிற்சாலை உரிமம் கோரி வழங்கப்படும் விண்ணப்பங்கள் இனி மாவட்ட கலெக்டரால் அனுமதி வழங்கப்படும். இது தொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ( ஊராட்சிகள்) அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.