உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிதாக 15 வீடுகள் கட்ட அனுமதி

புதிதாக 15 வீடுகள் கட்ட அனுமதி

கிணத்துக்கடவு; தமிழக பட்ஜெட்டில், 2025 - 26ம் ஆண்டில், கூடுதலாக, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட, 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், புதிதாக, 15 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதில், இலவச பட்டா வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்றும் சேதமடைந்த மண் சுவர் மற்றும் ஓட்டு வீடு வைத்திருப்பவர்களுக்கும் புதிதாக வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு வீட்டிற்கு 3.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !