உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் ஆதினம் நுாற்றாண்டு விழா: அக். 5ல் துணை ஜனாதிபதி பங்கேற்பு

பேரூர் ஆதினம் நுாற்றாண்டு விழா: அக். 5ல் துணை ஜனாதிபதி பங்கேற்பு

தொண்டாமுத்துார்: பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நுாற்றாண்டு விழா, கோவையில் அக்., 5ல் நடக்கிறது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். நுாற்றாண்டு விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், பேரூர் ஆதின மடத்தில் நேற்று நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரை வரவேற்பது, நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள், உணவு வழங்குவது போன்ற நிகழ்வுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், முக்கிய விருந்தினர்களை அழைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. விழாக்குழு தலைவர் பாலசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் குமாரசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை