மேலும் செய்திகள்
மானிய விலையில் விதை மற்றும் உரம்
14-Apr-2025
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, சோழனூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு, பழ பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.கிணத்துக்கடவு, சோழனூர் ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவில் மண்டபத்தில், 'அட்மா' திட்டத்தில், விவசாயிகளுக்கு பழப்பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி நடந்தது.இதில், வட்டார தொழில் நுட்ப மேலாளர் மேகலாதேவி, உதவி வேளாண் அலுவலர் மகபூப்பாட்ஷா மற்றும் வாணவராயர் கல்லூரி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சங்கரராமன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு வாழை மற்றும் மா போன்ற பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் அதன் அறிகுறிகள், பாதிப்புகள், பரவும் தன்மை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.மேலும், தென்னை மேலாண்மை முறைகள், வேர் வாடல் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி தெரிவித்தனர்.
14-Apr-2025