மருத்துவ கல்லுாரியில் பெட்டெரியன்-2025
கோவை; கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில், 'பெட்டெரியன்-2025' எனும் மாநில அளவிலான இரண்டு நாட்கள் பயிலரங்கு நடந்தது. டீன் கீதாஞ்சலி துவக்கிவைத்தார். இதில், மருத்துவத்துறையின் வளர்ச்சிகள், தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பயிற்சிகளின் அவசியம், அறுவை சிகிச்சை முன்னேற்பாடு, நோயாளிகளின் தகவல் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், மருத்துவ குழுவினர் பயிற்சி அளித்தனர். நோயாளிகளின் மாதிரி உருவ பொம்மைகளை கொண்டு, அறுவை சிகிச்சை செயல்பாடுகள் விளக்கமளிக்கப்பட்டது. சென்னை, மதுரை, கரூர், தேனி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 550 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். நிகழ்வின் இறுதியாக, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடந்தன. பேராசிரியர்கள், முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர்.