உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பச்சமலை ரோடு பஞ்சர் சீரமைக்க முகாமில் மனு 

பச்சமலை ரோடு பஞ்சர் சீரமைக்க முகாமில் மனு 

வால்பாறை;வால்பாறை, பச்சமலை எஸ்டேட் மருத்துவமனை செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என, 'மக்களுடன் முதல்வர் திட்டம்' முகாமில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ள, பச்சமலை எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி (வடக்கு, கிழக்கு டிவிஷன்) ராஜ்குமார் மற்றும் பொதுமக்கள் சார்பில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு கொடுத்தனர்.மனுவில், 'வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் மருத்துவமனை செல்லும் ரோடு, கரடு, முரடாக உள்ளது. இந்த ரோடு வழியாக தான் இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கும், தொழிற்சாலைக்கும் நடந்து செல்ல வேண்டும்.1.5 கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமலும், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் நடந்து செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், ஆம்புலன்சில் செல்பவர்கள் கூட உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, வால்பாறை நகராட்சி சார்பில், எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, மழை காலத்திற்கு முன் ரோட்டை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை