உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி முதல்வருக்கு மனு

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி முதல்வருக்கு மனு

வால்பாறை; வால்பாறை தாலுகா, மா.கம்யூ., கட்சி செயலாளர் பரமசிவம், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:வால்பாறையில், பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் எஸ்டேட்களில் மூன்று தலைமுறையாக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை மீட்டு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் சிகிச்சை பெற வருகின்றனர். எனவே, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர டாக்டர்கள் நியமிக்க வேண்டும். வால்பாறை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர் மற்றும் இதர பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை