உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.ஜி.வி., மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத வெற்றி

பி.ஜி.வி., மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத வெற்றி

கோவை, : துடியலுார் அருகே வரப்பாளையத்தில், டாக்டர் பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 10ம் வகுப்பு, பிளஸ், 1, மற்றும் பிளஸ் 2, பொதுத்தேர்வுகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், வெற்றி பெற்று சாதனை படைத்தனர். பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் வெற்றி பெற்றதை மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும், பள்ளியின் தாளாளர் முத்துலட்சுமி மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை