உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போன் டவருக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வாடகை; போனில் பேரம் பேசி ரூ.8 லட்சம் சுருட்டிய நபர்

போன் டவருக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வாடகை; போனில் பேரம் பேசி ரூ.8 லட்சம் சுருட்டிய நபர்

கோவை : மொைபல்போன் டவர் அமைக்க மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகை தருவதாக, ரூ.8.05 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை, சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 40. இவரது மொபைல் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் பிரபல மொபைல்போன் சேவை வழங்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார். மேலும், வீட்டு மொட்டை மாடிகளில் டவர் அமைத்து வருவதாக தெரிவித்தார்.இதையடுத்து தமிழ்ச்செல்வன் வீட்டு மாடியில் டவர் அமைக்க அனுமதி வேண்டும்; அதற்கு முன்பணம் ரூ. 40 லட்சம் மற்றும் மாத வாடகை ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.இதை நம்பிய தமிழ் செல்வன் தனது வீட்டு மொட்டை மாடியில் டவர் அமைக்க சம்மதித்தார். இதையடுத்து, டவர் அமைப்பதற்கான ஆவண செலவுக்கு ரூ.8.05 லட்சம் செலுத்த வேண்டும் என அவர் கூற, தமிழ் செல்வனும் மர்ம நபர் கேட்ட பணத்தை அனுப்பினார்.பணம் அனுப்பிய பின், தமிழ் செல்வனை யாரும் தொடர்பு கொள்ளாததால், மர்ம நபருக்கு போன் செய்தார். அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் தமிழ் செல்வன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மாநகர சைபர் கிரைம் போலீசில், அவர் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை