/   உள்ளூர் செய்திகள்   /  கோயம்புத்தூர்  /    மாஸ்டர்ஸ் கூடைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற உடற்கல்வி இயக்குனர்                      
மாஸ்டர்ஸ் கூடைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற உடற்கல்வி இயக்குனர்
கோவை; கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், ஸ்டீபன் கோஷி ஜேகப் நினைவு சர்வதேச மாஸ்டர்ஸ் கூடைப்பந்து போட்டி, நான்கு நாட்கள் நடந்தது. இதில், 45 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் பியூஷன் இந்தியா அணியிலும், 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கோயம்புத்துார் 'ஸ்குவாடு' அணியிலும், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஜெயசித்ரா விளையாடினார். முதல் பிரிவில் தங்கப் பதக்கமும், அடுத்த பிரிவில், இலங்கை அணியுடனான இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். தேசிய அளவில் பெருமை சேர்த்துள்ள ஜெயசித்ராவை கிருஷ்ணம்மாள் கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.