உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர் தேக்க பகுதியில் குப்பை குவிப்பு

நீர் தேக்க பகுதியில் குப்பை குவிப்பு

நெகமம்; வடசித்தூர் -- நெகமம் ரோட்டில் நீர் நிலை அருகே குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது.வடசித்தூர் -- நெகமம் ரோட்டின் ஓரத்தில், வளைவு பகுதி அருகே நீர் நிலை உள்ளது. இதில், தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதன் ஓரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பை குவிக்கப்பட்டுள்ளது.மேலும், நீர் தேக்கப்பகுதியின் ஒரு இடத்தில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் மாசடைந்துள்ளது. மேலும், அருகே விவசாய பூமி இருப்பதால், பயிர் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் கவனித்து, குப்பையை அகற்றி, அங்கு குப்பை குவிப்பதை தவிர்க்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை