உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதர் மண்டி காணப்படும் வருவாய்த்துறையின் இடம் 

புதர் மண்டி காணப்படும் வருவாய்த்துறையின் இடம் 

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், வருவாய்துறைக்கு சொந்தமான இடம் புதர் மண்டி காணப்படுகிறது. சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி பகுதியில், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்கள் கண்டறியப்பட்டு, வேலி அமைத்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. அதில், பழைய குடிமைப்பொருள் அலுவலகம் செயல்பட்ட இடம் அருகே, வருவாய்த்துறைக்கு சொந்தமான காலியிடம் இருந்தது. அந்த இடத்தை, சிலர் இறகு பந்து விளையாட பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், அரசு நிலங்களை வேலியிட்டு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்த இடத்தையும் அளந்து வருவாய்துறை அதிகாரிகள் வேலி அமைத்து, 'கேட்' அமைத்தனர். அதன்பின், போதிய பராமரிப்பு நடவடிக்கைகள் எடுக்காமல், அப்படியே விட்டு விட்டனர். தற்போது அப்பகுதி முழுவதும் புதர் மண்டி, விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை