500 டூவீலர்களை ஏலம் விட திட்டம்
கோவை; மாநகராட்சி வாகன நிறுத்தங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 500 வாகனங்களை ஏலத்தில் விட போலீசார் முடிவு செய்துள்ளனர்.கடந்தாண்டு, வாகன நிறுத்தங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட்டதில், ரூ. 15 லட்சம் தொகை வந்தது. அந்த தொகை மாநகர பகுதிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த பயன்படுத்தப்பட்டது.தற்போது, பறிமுதல் செய்யப்பட்ட, 500 வாகனங்களை ஏலம் விடுவதற்காக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக பெறப்படும் தொகையை வைத்து, பெண் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர பகுதிகளில் கூடுதல் சி.சி.டிவி., கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.