உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுச்சூழல் பாதுகாக்க 2,000 மரக்கன்று நடவு

சுற்றுச்சூழல் பாதுகாக்க 2,000 மரக்கன்று நடவு

கோவை, ;கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 36, 37, 38, 39, 40வது வார்டுகளில், மாநகராட்சிக்கு சொந்தமான, 48 இடங்களில், 2,000 மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மரக்கன்றுகள் நடும்பணியை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். வேம்பு, பூவரசன், மருதம், புங்கன், இலுப்பை, வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட உள்ளன. மேற்கு மண்டல உதவி கமிஷனர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை