உள்ளூர் செய்திகள்

400 மரக்கன்றுகள் நடவு

சூலுார்,; பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் முத்துக்கவுண்டன் புதூரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.கோயமுத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கா நகரில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ( ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு) அசோகன், சட்டப்பணிகள் ஆணைக்குழு பட்டியல் உறுப்பினர் மதிவாணன், சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், வனத்துறை அலுவலர் வெள்ளியங்கிரி மற்றும் பொதுமக்கள் இணைந்து, 400 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர்.மரம் வளர்ப்பதன் பயன்கள் குறித்து பலரும் பேசினர். சட்ட விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி செயலர்கள் கணேசமூர்த்தி, ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ