மேலும் செய்திகள்
தேசிய மாணவர் படை துவக்கம்
01-Nov-2025
கோவை: கோவை குழும தேசிய மாணவர் படை, கோவை தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி சார்பில், சமூக வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி மாபெரும் பேரணி, நேற்று நடந்தது. பேரணியை, 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி அதிகாரி கேப்டன் பாகராஜ் துவக்கி வைத்தார். 10 என்.சி.சி., அலுவலர்கள், 10 ராணுவ அலுவலர்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை6 மாணவர்கள் பங்கேற்றனர். அரசு கலைக் கல்லுாரியில் துவங்கி, ரேஸ்கோர்ஸ் திட்டச் சாலை வழியாக, 2 கி.மீ., சுற்றளவில் உள்ள பொதுமக்களுக்கு, தெருநாடகம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒரு முறை பயன் படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் ஏற் படும் பாதிப்புகள், அதற்கான மாற்று வழிகள் தொடர்பான கருத்துகள், மாணவர்களுக்கு, மருத்துவர்கள் வாயிலாக வழங் கப்பட்டது.
01-Nov-2025