உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்துடைப்புக்காக பிளாஸ்டிக் ரெய்டு; நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி

கண்துடைப்புக்காக பிளாஸ்டிக் ரெய்டு; நகராட்சி அதிகாரிகளால் அதிருப்தி

வால்பாறை: வால்பாறை நகரில் சில கடைகளில் நகராட்சி அதிகாரிகள் கண்துடைப்புக்காக பிளாஸ்டிக் ரெய்டு நடத்தினர். வால்பாறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. சுற்றுச்சூழலையும், நீர்நிலைகளையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக்குக்கு மாற்றாக காகிதப்பை, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வால்பாறை நகராட்சி சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள், வால்பாறையில் உள்ள சில கடைகளில் கண் துடைப்புக்காக ரெய்டு நடத்தினர். இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணியரிடம் ஆழியாறு மற்றும் மளுக்கப்பாறை சோதனை சாவடிகளில், பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். ஆனால் வால்பாறை நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க நகராட்சி அதிகாரிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதனால், நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கண் துடைப்புக்காக அதிகாரிகள் ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, பாரபட்சமின்றி கடைகளில் ஆய்வு நடத்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை